| பாடுங்குயில் (பாடல்கள்) | 133 |
9 மருளும் உலகம் உலகம் மாறி உருள்கிறது மனமும் சுருங்கி மருள்கிறது கலகம்காண விரைகிறது கடமை யாவும் குறைகிறது சமயம் சாதிப் பிளவுகளால் சண்டை ஒன்றே வளர்வதனால் இமயம் குமரி இடைவெளியில் எங்கும் பண்பே தளர்கிறது மாந்தர் என்னும் உணர்வுகளை மறந்தே போனோம் மதவெறியில் நீந்தும் வழியே தெரியவில்லை நீளும் பகைமை மறையவில்லை போரே எங்கும் புகைகிறது போதனை மட்டும் வளர்கிறது யாரே வருவார் அமைதிதர? எவரும் இல்லை பகை குறைய! நாவில் மட்டும் நல்லுரைகள் நயவஞ் சகமே உள்ளுரையில் சாவில் செல்லும் உலகமிது சற்றே எண்ணின் நலம்பெறுக |