134 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
10 கடவுள் எழுதிய கவிதை கவிதை வரைந்தவன் பாடிவந்தான்-அவன் கடவுள் எனும்பெயர் சூடிவந்தான் புவியில் நிகரெனக் கில்லையென்றான்-இது புதுமைப் படைப்பெனச் சொல்லிநின்றான் படிப்பறி யார்தமைக் காட்டிநின்றே-என்றன் படைப்பினுள் ஒன்றிது காண்க என்றான் எடுத்தறி வோடதைப் பார்த்தபின்னர்-அட எழுத்துப் பிழையிது வென்றுசொன்னேன் பொய்ம்மை வனைந்திடும் புல்லர்நின்றார்-தமைப் புனைகவி யாமெனச் சொல்லிநின்றான் செம்மை கெடுங்கவி செய்துவிட்டாய்-இது சீர்கெட்ட பாட்டெனச் செப்பிவிட்டேன் வாழ்வு பெரிதென மானம்விட்டார்-தமை வாழுங் கவியெனக் காட்டிவிட்டான் தாழ்வு படக்கவி ஆக்கிவிட்டாய்-இது தளைகெட்ட பாட்டென நீக்கிவிட்டேன் இமைப்பொழு தாகினும் இன்பமிலார்-பெறும் இரந்துணும் வாழ்வினைப் பாடலென்றான் அமைப்பினைப் பாழ்படப் பாடிவிட்டாய்-ஈது அடிகெட்ட பாட்டென மூடிவிட்டேன் வறுமை யுடன்வளங் காட்டிவந்தே-அவை வளர்விதிப் பாட்டென நீட்டிவந்தான் சிறுமை படக்கவி காடடவந்தாய்-தொடை சேர்கிலாப் பாட்டெனப் போட்டுநொந்தேன் |