பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)135

11
பொங்கிக் கிளர்ந்தது வீரம்

(சீனம் நம்மைத் தாக்கியபோது பாடப்பட்டது)

வெள்ளையர் ஆண்டிட வீழ்ந்துகிடந்தது நாடு-கதை
வேறுநடந்தது வெந்தும டிந்தது பாடு
கொள்ளையர் மீண்டிவண் கூடிப்புகுந்திட லாமோ-அவர்
கொட்டம டங்கிடக் கூடிஎ திர்த்திடு வோமே

ஏழைய ராயினும் கோழையரல்லர்நம் மாந்தர்-படை
ஏற்றம்மி குந்திடப் போரிற்ப டைக்கலம் ஏந்திக்
காளைகள் ஆயிரம் காணுமப கைப்புலம் நீந்தும்-ஒரு
காவல்பு ரிந்திடும் சேனைபெ ரும்புகழ் ஏந்தும்

சங்கம்மு ழங்கிட வெங்களங் கண்டிடும் வீரர்-எம்
சந்ததி சந்ததி யாகவ ளர்ந்திடும் சூரர்
தங்களைப் பெற்றிடுந் தாயகங் காத்திடுந் தீரர்-அவர்
தாவியெ ழுந்திடின் ஒடிவரும்பகை தீரும்

சாவுக்க ளந்தனில் ஆடிக்க ளித்திடும் நேரம்-எனச்
சங்கமொ லித்தது பொங்கிக் கிளர்ந்தது வீரம்
‘சூ’வைவி ரட்டிடச் சூடுபி டித்தது நாட்டில்-ஒரு
சுட்டுவி ரற்கிடை விட்டுக்கொ டுத்திட மாட்டோம்.


* ‘சூ’ -சூயன்லாய்