| பாடுங்குயில் (பாடல்கள்) | 137 |
13 காட்டிக் கொடுக்கலாமோ? காட்டிக் கொடுக்க லாமோ-நாட்டைக் காட்டிக் கொடுக்கலாமோ-மாலை சூட்டி யழைக்க லாமோ-பகையைச் சூழ்ந்து பிழைக்கலாமோ? வீட்டைக் கெடுக்க லாமோ-உள்ளே வேட்டை தொடுக்க லாமோ-இங்கே தேட்டை யடிக்க லாமோ-கெட்ட சேட்டை பிடிக்க லாமோ? நாடித் திரிய லாமோ-பிறனை நத்தி அலைய லாமோ-அடிமை தேடிக் கொடுக்க லாமோ- நாட்டைத் தீயர் பிடிக்க லாமோ? கூடி விளக்க லாமே-நமக்குள் கொள்கை முழக்க லாமே தேடிக் கொடுக்க லாமே-அதனைச் சேர்ந்து முடிக்க லாமே தாயைப் பழிக்க லாமோ-பகைக்குத் தாழ்ந்து பிழைக்க லாமோ-இழிந்த நாயை நிகர்க்க லாமோ-ஈன்ற நன்றி மறக்க லாமோ? |