பக்கம் எண் :

138கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

காலைப் பிடிக்க லாமோ-பகைக்கு
    வாலைக் குழைக்க லாமோ-நமது
வேலைக் கொடுக்க லாமோ-கையில்
    வேலை கெடுக்க லாமோ?

பற்றை விடுக்க லாமோ-நாட்டின்
    பண்பைக் கெடுக்க லாமோ-பகையைச்
சுற்றி நொறுக்க வாவா-பகைவர்
    சூழ்ச்சி விரட்ட வாவா