பக்கம் எண் :

14கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

காயைக் கவர்ந்திடுவார்-நல்ல
கனிச்சுவை தானுணரார்
மாயச் சுமையுடலை-ஓம்பிட
மானம் விலைபகர்வார்

தோள்வலி மிக்கமையால்-எம்மைத்
தூற்றினர் வட வேந்தர்
வாள்வலி யாலவரை-வீழ்த்தி
வாழ்ந்ததும் இந்த இனம்
மாள்வது கண்டபினும்-பேதை
மாந்தரும் துஞ்சுகின்றார்!
ஆள்வதும் எம்மொழியோ?-இங்கே
ஆண்மையும் செத்ததுவோ?