9 சங்க இலக்கியம் - எடுப்பு சாற்றி வளர்ந்திடுவாய் - நம் சங்க இலக்கியப் பெருமையெலா மிங்குச் -சாற்றி தொடுப்பு போற்றி வளர்த்திடும் பொறுப்பினை ஏற்று மாற்றலர் தூற்றிடும் கூற்றினை மாற்று -சாற்றி முடிப்பு காதலும் வீரமும் கண்ணெனக் கூறும் கற்பவர் நெஞ்சினில் பெருமிதம் சேரும் தீதெனும் அடிமைச் சிறுமைகள் மாறும் தெளிவுடன் அறிவும் சிந்தனை கூறும் -சாற்றி சாதி சமயச் சழக்குகள் இல்லை சகலரும் உறவினர் என்பதோர் சொல்லை ஓதிய அறநூல் சங்கத்துச் செல்வம் உயிரெனக் காப்பதால் பகையைநாம் வெல்வம் -சாற்றி |