பக்கம் எண் :

140கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

ஒன்றனுள் ஒன்றுக ரைந்தழியும்-தம்பி
    ஒன்றே வளரம றைந்தொழியும்
இன்றொரு மைப்பா டெனமொழியும்-சொல்லில்
    *ஏய்பொருள் தானிது பாரறியும்

நம்முடன் மற்றவர் தாழ்வின்றி-வாழ
    நாடுவ தொற்றுமை வாழ்வன்றோ?
நம்மழி வேபிறர் வாழ்வென்றால்- அதுதான்
    நாடும் ஒருமைப் பாடென்பார்

ஒற்றுமை என்பதை வேண்டுதியோ?-தம்பி
    ஒருமை எனுமது வேண்டுதியோ?
உற்றொரு தீர்வினைத் தேர்ந்தெடுநீ-அந்த
    உண்மையை நெஞ்சினில் பூண்டெழுநீ.


* ஏய் - பொருந்திய