| பாடுங்குயில் (பாடல்கள்) | 141 |
15 போது விரிந்தது செவிலி துள்ளும்* பிணை யனையாள்-இன்று புள்ளி மயில் நடையாள்!-மனம் கள்ள மிலா தமகள்-இன்று வெள்கும் முக முடையாள்! ஆடை அணிவகையில்...மனம் நாடுதல் இன் றியவள்-எங்கும் ஆடி வருபவள் தான்-முன்னர் ஓடித் திரி பவள்தான் ஏந்திழை தா னெடுத்தே-கருங் கூந்தல் தனை முடித்தாள்-அதில் பூந்துணர் சேர்த் தமைத்தாள் - புதுச் சாந்துகள் மேற் படைத்தாள்! கண்ணில்மை பூ சுகிறாள்-கடைக் கண்களில் பேசுகிறாள் - இதழ்ப் புன்னகை வீசுகிறாள்-மொழி என்னென்ன பேசுகிறாள்! செந்தளிர் போ லுடலில்-நறுஞ் சந்தனம் நீ வுகிறாள்-தனம் விந்தை தரும் வகையில்-இரு பந்தென விம் முகிறாள்!
* பிணை - பெண்மான் |