| பாடுங்குயில் (பாடல்கள்) | 143 |
16 தெரு விளக்கு மிகத்துணி வுடனே நடுத்தெரு வோரம் லிரவிய இருளில் நிலைபெறும் ஓர் தொழிலேன் அகப்பொருட் கள்ளர் புறப்பொருட் கள்ளர் அவரவர் செல்வார் அறிந்தும் வாய்மொழியேன் பனியிலும் மழையிலும் நனைவதும் உண்டு பகல்தரும் வெயிலில் காய்வதுந் தினமுண்டு தினையள வெனினும் தனிநலம் இன்றிச் செய்திடும் பொதுநலஞ் சேரும் மனமுண்டு புகுமிருள் கண்டால் எனைவர வேற்றுப் புவியோர் தொழுவார் புகழ்வார் கைகுவித்தே பகல்வரும் அதன்பின் எனைமதி யார் இப் பாரினர் செயலை நகைப்பேன் வாய்குவித்தே ஊரார் அனைவரும் விழிதிற வாமல் உறங்கிடு வார்நான் இரவினில் விழித்திருப்பேன் சோரா விழியிமை ஒருநாள் சோர்ந்தால் தூற்றுவர் பழிகள் சாற்றுவர் பொறுத்திருப்பேன் தெருவிலென் னருகினில் சிறுவர்கள் ஆடித் திரிந்திடு வார்மனம் மகிழ்ந்திருப் பார்விருப்பால் ஒருகால் உடையேன் நடவா நிலையேன் ஓடிட முடியாக் கவலையில் நானிருப்பேன் |