148 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கனிமலர்க் காவென நான் வந்தேன்-பண்பு கருகிடுந் தாவென ‡வேநொந்தேன் தனியுரி மைக்கவி நானம்மா-துன்பம் தரும்அடி மைத்தொழில் ஏனம்மா? புனிதத் தொழிலென நான்கொண்டேன் - இன்று புன்மைச் செறிவுள தேகண்டேன் இனியித் தொழில் எனக் கேனம்மா?-கவிதை எழுதும் பணிபுகு வேனம்மா.
‡ தாவு - இடம் |