| பாடுங்குயில் (பாடல்கள்) | 149 |
19 பெற்றோர் புலம்பல் உண்ணுஞ் சுவையமு தூட்டிவிட்டோம் - நன்மை ஒதிடும் பள்ளியில் கூட்டிவிட்டோம் எண்ணம் அனைத்தையும் வாட்டிவிட்டீர்-ஊரார் ஏளனஞ் செய்திடக் காட்டிவிட்டீர்! கற்றவர் சொல்லையுங் கேட்பதில்லை-வீணே காலங்கள் போவதும் பார்ப்பதில்லை பெற்றவர் சொல்லையும் ஏற்பதில்லை - நல்ல பிள்ளைகள் யாரையும் சேர்ப்பதில்லை! வேடிக்கை செய்வதும் எல்லையில்லை - பள்ளி வேளைதொறுஞ் சென்று கற்பதில்லை நாடிக்கை வண்ணமே காட்டிநின்றால்-உங்கள் நாளை நடப்பென்ன காளைகளே? சட்டையில் மாற்றங்கள் கண்டுவிட்டீர் - நல்ல சால்பையும் ஐயையோ கொன்றுவிட்டீர்! *அட்டைகள் தூக்கலில் வென்றுவிட்டீர் - ஆனால் ஆகா நெறிக்கன்றோ சென்றுவிட்டீர் பாழ்வினை எத்தனை செய்துவிட்டீர்-அந்தோ பள்ளியில் கல்வியைக் கொய்துவிட்டீர் யாழிசை கேட்டிடக் காத்திருந்தோம்-ஆனால் ஆந்தையின் கூக்குரல் கேட்டுநொந்தோம் பெற்றவர் நாங்களோவாழ்ந்துவிட்டோம்-எங்கள் பிள்ளைகள் நீங்களோ தாழ்ந்துகெட்டால் உற்றதை எப்படிக் கண்டிருப்போம்?-வாயை ஊமைகள் போலவா கொண்டுநிற்போம்? 4.5.1973
* ஊர்வலத்தில் அட்டை தூக்குவது |