150 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
20 என்றும் பிறப்பேன் அன்று பிறந்தேன் அரை நூற்று மூன்றன்பின் இன்றும் பிறக்கின்றேன் என்தமிழ்க்கு-நன்றுசெய என்றும் பிறப்பேன் இளங்குழந்தை போலிருப்பேன் தொன்றுதமிழ் முப்பால் சுவைத்து காலம் அனைத்துங் கலங்காத நெஞ்சுரமும் ஞாலம் வணக்குபுகழ் நற்கவியும்-கோலமுறச் சூழ்ந்திருக்கும் நட்பும் சுடர்க்கொடிநான் பெற்றென்றும் வாழ்ந்திருக்க ஈவாய் வரம் சொல்லும் மொழிக்குள்ளே சூடேற்றித் தீமையெலாம் வெல்லுந் திறமளிக்க வேண்டுமம்மா-நல்ல உலகொன்று காண உளங்கொண்டேன் அன்னாய் நிலைகொண்டு வந்தென்முன் நில் 7.10.73
54-ஆவது பிறந்தநாளன்று பாடியது |