152 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
உள்ளஞ் சுடுசொல் பொறுப்பதிலை-சொன்னால் உடனே அழுவேன் வெறுப்பதிலை கள்ளங் கவடந் தரிப்பதிலை-நீயேன் கனிவாய் மலர்ந்தே சிரிப்பதிலை? அழுக்கா றாசை வெகுளியெனும்- நெஞ்சின் அழுக்குகள் யாவுங் கழுவினைநீ இழுக்கா மானம் அருளறிவு -அணிகள் எத்தனை எத்தனை அருளினைநீ நின்னருள் மாமழை பொழிந்திடுவாய்-நானும் நீங்கா ததனுள் நனைந்திடுவேன் என்னுயிர் நீதான் தமிழம்மா-என்னை எடுத்தொரு முத்தம் அருளம்மா. |