| பாடுங்குயில் (பாடல்கள்) | 153 |
22 என்றும் நானோர் இளைஞன் என்றும் நானோர் இளைஞன்-பாடல் எழுதிக் கொழிக்குங் கவிஞன் ஒன்றும் வாழ்விற் சுவைஞன்-நெஞ்சில் உணர்ச்சித் துடிப்போ மிகைஞன் செந்தமி ழமுதம் உண்டேன்-முதுமை சிறிதள வேனும் அண்டேன் சிந்தையில் இளமை கொண்டேன்-உலகம் சிறிதாய்த் தோன்றிடக் கண்டேன் கற்பனைப் பெண்ணே வருவாய்-நின்றன் கைகளை என்பால் தருவாய் பொற்கலன் ஆயிரந் தருவேன்-அவையே புதுமைக் காவிய உருவாம் ஊரார் ஏதோ மொழிவார்-அதுதான் உளரும் வாயர் தொழிலாம் பாராய் எனைநீ விழியால்-என்னைப் பழகிய பின்நீ குழைவாய் என்றும் உனதே நெஞ்சம்-அதுவே எழிலார் மலர்சேர் மஞ்சம் ஒன்றிய ஆசையிற் கெஞ்சும்-எனைநீ ஒதுக்கிடின் உயிரே அஞ்சும் |