154 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
உனைநான் என்றும் பிரியேன்-பிரியின் உயிர்தான் பெரிதோ தரியேன் புனைபா உணர்வாற் பொழிவேன்-கண்டு பூமியும் நம்மைத் தொழுமே வானிற் பறந்தே செல்வோம்-நம்பால் வருமிடர் அனைத்தும் வெல்வோம் தேனில வுக்கதை சொல்வேன்-அங்கே தெள்ளிய பாநலம் கொள்வோம் கண்ணுள் ஒளியாய் ஒன்றி-நீஎன் காலம் முழுதும் நின்றால் மண்ணும் விண்ணும் ஒன்றே-என்றும் மருவிக் களிப்போம் நன்றே |