பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)155

23
யாரடியோ?

கொள்ளைப் பனிபொழி மார்கழித் திங்களில்
    கோலமி டத்தெரு வாயிலிலே
அள்ளிப் புனல்தெளித் தென்மகள் புள்ளிகள்
    ஆயிரம் வைத்தனள் பாரடியோ!
வெள்ளை நிலாமகட் கன்னி உலாவரும்
    வீதியில் எத்தனை கோலமடி!
வெள்ளி எனும்பெயர் கொண்டிடும் புள்ளிகள்
    விந்தையில் வைத்தவள் யாரடியோ?

ஈகை மனத்தவ ளேஉனைப் போல்மகள்
    ஏந்தி நடம்புரிந் தாளடியோ!
†ஒகை மிகுத்திட ஆடல் விளைத்திடும்
    ஓவியம் எத்தனை பாரடியோ!
மேகம் முழங்கிடத் தாளம் இசைத்திட
    மென்மயில் கூத்திடல் காணடியோ!
தோகை விரித்தொரு மாமயில் ஆடிடச்
    சொல்லிக் கொடுத்தவர் யாரடியோ?

நாடொறுங் கற்றிடும் பாடலைப் பெற்றிடும்
    நம்மகள் பாடிடல் கேளடியோ!
வாடிடும் என்மனந் தேறிடச் செய்திடும்
    வல்லமை வாய்ந்திடும் யாழடியோ!


†ஓகை - மகிழ்ச்சி