பக்கம் எண் :

156கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

கூடிடும் மாமலர்ச் சோலையி லேஒரு
    கொம்பினில் தீங்குயில் கூவுதடி!
பாடிடும் மென்குரல் தேனடி! அவ்விசைப்
    பாடங் கொடுத்தவர் யாரடியோ?

பற்றிய ஆசையில் சிற்றில் இழைத்திடும்
    பாவையுடன் செல்வியைப் பாரடியோ!
சுற்றிடும் நீள்மதில் முற்றிய வீடுகள்
    சூழ்ந்துள காட்சியைக் காணடியோ!
தொற்றிய தென்னையில் பற்றி யசைந்திடும்
    தூக்கணங் கூடுகள் பாரடியோ!
கற்றவர் போலவை கட்டிட அத்திறன்
    கற்றுக் கொடுத்தவர் யாரடியோ?