| பாடுங்குயில் (பாடல்கள்) | 157 |
24 குற்றங் குற்றந்தான் பத்தியின் பேரால் நடந்தா லென்ன பகுத்தறி வாலது நடந்தா லென்ன கற்றவன் தீமை புரிந்தா லென்ன மற்றவன் அதையே செய்தா லென்ன குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் பட்டைகள் தீட்டிக் கொட்டைகள் கட்டிப் பதுக்கலும் கடத்தலும் செய்தா லென்ன சட்டையை மாட்டிச் சமத்துவம் பேசிச் சதிச்செயல் திருட்டுகள் செய்தா லென்ன குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான் கோவிலில் நாடொறும் பூசனை செய்வோர் கும்பிடுஞ் சிலையைத் திருடின ரேனும் 'b6பாவிய மடமையைச் சாடிடுந் தூய பகுத்தறி வாளர் கவர்ந்தன ரேனும் குற்றங் குற்றந்தான்-ஒரு சட்டஞ் சட்டந்தான்
'b6 பாவிய - பரவிய |