| பாடுங்குயில் (பாடல்கள்) | 159 |
25 கற்பனை மன்னவன் கவியெனப் போற்றிடும் பேர்படைத்தான்- நெஞ்சில் கற்பனை யாலொரு பார்படைத்தான் புவியதை ஆண்டிடக் கோலெடுத்தான் -அங்கே புதுமைகள் பற்பல தான்கொடுத்தான் வறுமைப் பகையொடு போர்தொடுத்தான்-மக்கள் வளமுடன் வாழ்ந்திடச் சீர்கொடுத்தான் சிறுமைக் குறைகளை வேரெடுத்தான்-ஆண்மைச் சிங்கமென் றோங்கிடும் பேரெடுத்தான் நலமிகும் ஆட்சியொன் றேவிரித்தான்-யாவும் நாட்டவர்க் கேபொது வென்றுரைத்தான் குலமகன் மன்னவன் போற்சிரித்தான்-என்றும் கோட்டைகள் கட்டிட வேகுறித்தான் கற்பனை நாட்டையே மேல்நினைந்தான்-மண்ணில் கட்டிய வீட்டினைத் தான்மறந்தான் முற்பட மாந்தரை யேநினைந்தான்-கொண்ட மொய்குழல் மாதினைத் தான்மறந்தான் பாட்டுல குக்கவன் சோறளித்தான்-பாரில் பைந்தமிழ்க் கோவெனப் பேரெடுத்தான் வாட்டம ளித்திடும் சோர்வினைத்தான்-சொந்த வாழ்வினில் கண்டுகண் ணீர்வடித்தான் |