| பாடுங்குயில் (பாடல்கள்) | 161 |
26 கவிதைக் காதலி இன்பங்கள் சூழ்கின்ற போது-நெஞ்சை எட்டிப் பிடித்துக் களிப்பிக்கும் மாது துன்பங்கள் வந்துற்ற போதும்-என்னைத் தொட்டுப் பிடித்துக் களிப்பாளெப்போதும் கலைமாதின் உள்ளமோ வெள்ளை-என்றன் கலிதீர்க்க வந்தாடும் போதிலோர் பிள்ளை அலைமோதும் துன்பத்தில் *தள்ளை-வஞ்சி †ஆசிரியத் தருகின்ற இன்பமோ கொள்ளை தனியாக நான்வைகும் வேளை-என்பால் தாவிக் குதித்துச் சிரிப்பாள்அப் பாவை இனிதாக வாய்த்துள்ள கோவை-வாயால் ஈந்தாளே அவ்வின்பம் எந்நாளும் தேவை கண்ணுக்குள் கண்ணாக நிற்பாள்-காதல் காட்டாற்று வெள்ளைத்தைக் கண்டேத விப்பாள் பெண்ணுக்குள் ஒன்றாகி நிற்பேன்-ஆ ஆ பேரின்பம் பேரின்பம் விண்ணுக்கும் அப்பால் கவிமாது முன்வந்த காலை-இன்பங் காணாமல் கூடாமல் வேறென்ன வேலை? அவளாகத் தான்வந்து மாலை-சூட்டி அணைப்பாள் தொடுத்தே கொடுப்பேன்பா மாலை
* தள்ளை - தாய் † ஆசுஇரிய - குற்றம் நீங்க |