162 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கண்காட்டி விட்டங்குச் செல்வாள்-நானும் கைகாட்ட என்பால்வந் தேதேதோ சொல்வாள் பண்காட்டும் பாட்டொன்று சொல்வேன்-இன்னும் பாடென்று பாடென்று நெஞ்சிற்பு கல்வாள் நெஞ்சங்கள் ஒன்றாகும் போது-மற்ற நினைவேதும் இல்லாமல் செல்வேன் விண்மீது கொஞ்சுங்கள் கொஞ்சுங்கள் என்றே-வஞ்சி கொண்டாடி மன்றாடிக் கெஞ்சுவாள் நின்றே என்பாட்டில் இன்பங்கள் கண்டாள்-விஞ்சும் எழில்கொண்ட பொற்பாவை நீள்காதல் கொண்டாள் பின்பாட்டுப் பாடாமை கண்டாள்-என்னைப் பித்தாக்கி நீங்காத சொத்தாக்கிக் கொண்டாள் 22.9.1975 |