பக்கம் எண் :

164கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

சாதியின் வேரை வெட்டுங்கள்-நெஞ்சில்
    சமநிலைப் பண்பை ஒட்டுங்கள்
மேதினி எல்லாஞ் சுற்றுங்கள்-அங்கே
    மேன்மைகள் கண்டே பற்றுங்கள்

வாழ்க்கையில் மேடு பள்ளங்கள்-போக்க
    வழிவகை கண்டே கொள்ளுங்கள்
தாழ்ச்சிகள் எல்லாந் தள்ளுங்கள்-சோம்பிடத்
    தளர்வதை நீங்கள் எள்ளுங்கள்

மொழிபல கற்கச் செல்லுங்கள்-ஆனால்
    முத்தமிழ் உயிராச் சொல்லுங்கள்
இழிசெயல் சாய்த்தே வெல்லுங்கள்-நாட்டில்
    எழில்வளங் காண நில்லுங்கள்

23.9.1975