| பாடுங்குயில் (பாடல்கள்) | 167 |
30 மாந்தன் கற்பனை கற்பனைமிக்கான் உலகில்-அதனால் கடவுளைத் தந்தான் சிலையில் அற்புதஞ் சொன்னான் கதையில்-நல்ல அறிவைம றந்தான் தரையில் கல்வியைக் கற்பனைக் கண்ணால்-கண்டு கலைமகள் என்றவன் சொன்னான் பல்வகைச் செல்வமுங் கண்டான்-தெய்வப் பற்றால் திருமகள் என்றான் தோற்றமும் வாழ்தலுங் கண்டான்-செத்துத் தொலையும் ஒடுக்கமும் கண்டான் நாட்படு கற்பனை கொண்டான்-மூன்றும் நான்முகன் மாலரன் என்றான் பூமியுந் தேவியில் சேரும்-தோற்றப் பொலிவொரு மன்மதன் ஆகும் சாமியென் றெத்தையும் கூறும்-மாந்தன் சாற்றிய கற்பனை பாரும் வானுயர் கோபுரங் கட்டிக்-கோவில் வாயிலில் வந்துகை கட்டித் தானொரு மண்குடில்கட்டி-வாழ்ந்து தலையெழுத் தென்றவன் மட்டி |