பக்கம் எண் :

168கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

அருள்தரும் ஆண்டவன் என்றான்-மக்கள்
    அன்பினை நெஞ்சினில் கொன்றான்
பொருள்தரும் என்றுபு கன்றான்-உழைக்கும்
    பொழுதெலாம் சோம்பலில் நின்றான்

குற்றங்கள் எல்லாம் புரிவான்-சுற்றிக்
    கோவிலி னுள்ளே வருவான்
முற்றிய தேங்காய் தருவான்-பாலும்
    மொய்த்துள பூவுஞ் சொரிவான்

அத்தனைப் பாவமுந் தீரும்-என்றே
    அங்கவன் நம்பியே கூறும்
பித்தனைப்போலஎல் லாரும்-செய்தால்
    ‡பீழைகள் எப்படித் தீரும்?

3.10.1975


‡பீழை - குற்றம்