பக்கம் எண் :

காவியப் பாவை17

10
விந்தையடா விந்தை
-

மாநிலந் தன்னில் நடத்தி வரும் - விந்தை
    மானிடர் செய்கையைச் சாற்றுகின்றேன்
ஏனிவர் இவ்வணம் ஆற்றுகின்றார் - என
    எண்ணித் துணிந்துசொல் ஓர் முடிவு

செத்த பிணத்தைப் புதைத்து வைத்த - குழி
     சென்றங்கு மீண்டுங் கிளறுகின்றார்
பித்தரைப் போலப் பிதற்றுகின்றார் - இனிப்
     பேசாப் பிணத்தின் முன் பேசுகின்றார்

எடுத்திடும் மேனிதனில் - படி
     தூசி துடைத்துடன் பூமுடித்து
வேண்டிய பூசை செலுத்துகின்றார் - இந்த
     விந்தையை யாதென் றுரைத்திடுவேன்

புகழுரை எத்தனை தான் - அட!
     சொல்லுக் கடங்காமல் மிக்கதடா!
ஏட்டில் எழுதிய போற்றிகளும் - ஒரு
     எண்ணிக்கை காட்டத் தொலையுமதோ?

ஆயிரம் கொட்டுகின்றார் - அணி
     ஆடை பல செய்து பூட்டுகின்றார்
கோயிலைப் போற்பல மாளிகைகள் - கட்டிக்
     கொள்ளையாம் மானியம் கூட்டுகின்றார்