18 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
விந்தையடா இது விந்தையடா - என வேறொரு திக்கில் விரைந்து சென்றேன் சிந்தனை அற்றவர் அங்கிருந்து - புரி செய்கையைக் கண்டுளம் நொந்ததடா கண்ணொளி மங்கிய காட்சியினான் - பிறை கண்டது போலொரு கூனுடையான் எண்ணிய எண்ணம் விளம்புதற்கே - ஒரு ஏதுவிலான் திக்கு வாயுடையான் நடந்திடக் கால்களிலான் - அவன் நிற்பது வோஒரு கோலின்துணை ஒன்றிய கோலினைப் பற்றுதற்கோ - கையில் உற்றவிரல்களும் முற்றுமிலான் இத்துணைப் பண்புகள் கொண்டவனை - நலம் ஏற்றிட ஊசிகள் போடுகின்றார் சித்த மருத்துவம் செய்யினுமே - அவன் சீரிய வாழ்வினைக் காண்பதுண்டோ னாடையும் போர்த்துகின்றார் - நல்ல ஆட்சிப் பொறுப்பையும் நல்குகின்றார் காணிக்கை எத்தனை கொட்டுகின்றார் - இந்தக் காட்சியைக் காணக்கண் கூசிநின்றேன் உருக்கிடும் ஓர்குரல்தான் - செவி உற்றதும் சட்டென நான் திரும்பக் கள்ளமில் லாஒரு ஏழைமகன் - பசி காட்டும் முகத்துடன் நின்றிருந்தான் கோர்துணி அற்றவனாம் - கையில் காசு பணங்களும் அற்றவனாம் திட்டி விரட்டினர் அன்னவனை - அவன் தேம்பிக் கிடப்பதைக் கண்டு நின்றேன் |