பக்கம் எண் :

காவியப் பாவை19

தங்க உடல்நலம் கொண்டவன்தான் - அவன்
     தங்க இடமின்றிச் சுற்றுகின்றான்
எங்கும் புறக்கணிப் பானதடா - சிங்க
     ஏறு வளங்குன்றிப் போனதடா!

ஆவி உடல்வளம் அத்தனையும் - பெறும்
     ஆண்மகன் இப்படித் தேய்ந்திடவே
பாவி மடம்படு மானிடர்கள் - நஞ்சு
     பாய்ச்சுதல் கண்டுளம் வெந்ததடா!

மொழிக்கிங்கு சீர்வரிசை - ஒரு
     செம்மை பெறாமொழிக் கேற்றமிங்கே
பெற்ற மொழிக்கொரு காவலில்லை - என்ற
     பெற்றியை நெஞ்சம் நினைந்ததடா!