20 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
11 மறந்தறியேன் - எடுப்பு தாயே உனைநான் மறந்தறியேன் - நின் தாளலால் வேறெதும் நினைந்தறியேன் - தமிழ்த் -தாயே தொடுப்பு நீயே துணையென்று நெஞ்சினில் கொண்டு நினைந்திடும் மனைதனை மறந்ததும் உண்டு - தாயே முடிப்பு உன்முகம் மலர்ந்தால் என்முகம் மலர உளமகிழ்ந் திருந்தேன் உலகினை மறந்தேன் என்முகஞ் சுருங்கிட நன்மனம் வருந்திட ஏனெனை விடுத்தாய் இடர்தனைக் கொடுத்தாய் -தாயே நொந்தே நின்மகன் நுடங்கிடல் நன்றோ? நோய்தனை நீக்கிடல் தாய்கடன் அன்றோ? நந்தா விளக்கே நானென்ன செய்தேன்? நாளெலாம் இருள்தனில் நலிந்திடச் செய்தாய் |