170 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
நாட்டையும் உன்னையுஞ் சேர்த்து-நெஞ்சில் நாளும் நினைத்தே உழைத்திடும் வேர்த்து வீட்டையும் நாட்டையும் பார்த்து-தம்பி வீறுகொண் டேஎழு தோள்களை ஆர்த்து நான்முகன் உன்மண்டை ஒட்டில்-ஏதோ நாட்டினன் என்பதை நெஞ்சைவிட் டோட்டில் ஏன்வறு மைத்துயர் நாட்டில்?-தம்பி ஏறுமுன் னேறுழைப் பாலுயர் கோட்டில் 4.10.1975 |