174 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கூடிக் கிடந்தவர் ஓடிப் பிரிந்தனர் கொண்டனன் ஒர் கவலை-என்றும் ஆடித் திரிந்தவன் வாடிப் பொழிந்தனன் அம்ம! கண் ணீர்த் திவலை மட்டித் தனங்களைச் சுட்டுப் பொசுக்கிடும் மாவலி கொண் டவன்தான்-தன்னைக் கட்டிப் பிடித்துடல் தொட்டுச் சுவைத்திடும் காலனை வென் றவன்தான் கட்டிப் பிடித்தொரு விண்ணை வளைத்ததில் ஏறிந டந் தவன்தான்-கண்ணீர் கொட்டிச் சொரிந்திட மண்ணிற் கிடந்திடர் கூடிக்கி டந் தனனே! 5.10.1975 |