பக்கம் எண் :

176கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

நோய்மருந் தெல்லாங் கலப்படம்-வந்த
    நோய்களும் எங்கே சரிப்படும்?
காய்கனி கூடக் கலப்படம்-காவல்
    காத்திடுஞ் சட்டங் கலப்படம்

‡வேந்தியல் காரர் கலப்படம்-அன்னார்
    வீட்டினுள் சென்றால் வெளிப்படும்
மாந்தருக் கெல்லாம் வெளிப்படை-ஆனால்
    மாற்றிடத் தானே பொறுப்பிலை

தாயகப் பேரைக் கெடுத்திடின்-மீளாத்
    தண்டனை தந்தால் சரிப்படும்
வாய்மொழிப் பேச்சா திருத்திடும்?-சொன்னால்
    வஞ்சகர்க் கெங்கே புலப்படும்?

6.10.1975


‡வேந்தியல்காரர் - அதிகாரிகள்