178 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
நகைத்திட மெல்லுடல் வளைவார்-பெண்மை திகைத்திடக் கோணலில் குழைவார் தகைத்திடும் ஆடையைக் களைவார்-அந்தோ புகைப்படங் காட்டிட அலைவார் படுத்திடும் காதலர் அறையில்-உள்ளே நடத்திடும் செய்கையைத் திரையில் படைத்திடல் தானொரு கலையா?-பண்பை முடித்திட வேஎழும் கொலையா? கலைப்பெயர் சொல்லியே திரிவார்-கெட்ட புலைத்தொழில் ஒன்றையே புரிவார் நிலைத்திடு சிந்தனை யறிவார்-இங்கே தலைப்படி னேநலம் உருவாம் மடத்தனம் மிக்கனர் மடவார்-ஆண்கள் தடுத்திலர் முற்பட *மிடைவார் குடித்தனந் தானுருப்படுமா?-அந்தப் படத்தொழில் தான்சரி படுமா? 6.10.1975
* மிடைவார் - நெருக்கமாகக் கூடுவார் |