பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)179

36
உலகம் எங்கள் கையிலே!

குலுக்கிக் குலுக்கி ஆட்டுவோம்-உடலைக்
    குனிந்து நிமிர்ந்து காட்டுவோம்
துலக்கி ஆசை ஊட்டுவோம்-எம்மைத்
    தொடருங் காசைக் கூட்டுவோம்

காமஞ் சொட்டப் பாடுவோம்-ஆடை
    கலைய விட்டே ஆடுவோம்
காமக் காட்சி நாடுவோம்- அந்தக்
    கலையை வளர்க்கக் கூடுவோம்

நடிப்பை முகத்தில் தேக்கினால்-எவரே
    நயந்து வந்து பார்க்கிறார்?
இடுப்பை வளைத்துக் காட்டினால்- மொய்க்கும்
    ஈக்கள் போலக் கூட்டமே

முகத்தில் உணர்ச்சி கூட்டினால்- எந்த
    மூடன் வருகை காட்டுவான்?
அகத்தில் உணர்ச்சி ஊட்டினால்- கூட்டம்
    ஆட்டு மந்தை காட்டுமே.

பெண்மை நாணம் பேசினால் - எங்கள்
    பேரும் புகழும் வீசுமோ?
உண்மை கண்டு கூசுவோம்-எங்கள்
    உலகம் யாவும் பாசமே