180 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
வீணிற் பண்பு செப்பினால்-நாங்கள் விசிறி சேர்ப்ப தெப்படி? நாணம் மானஞ் செப்பினால்-நாங்கள் நடிகை யாவ தெப்படி? கலைகள் கலைகள் என்றெலாம்-சொல்லும் கதையை நீங்கள் நம்பலாம் கலையும் ஆடை ஒன்றலால்-வேறு கலையின் சாயல் கண்டிலோம் கலையின் நுண்மை கற்றுளார்-வாழக் கையில் என்ன பெற்றுளார்? உலகம் எங்கள் கையிலே-மக்கள் உள்ளம் எங்கள் மெய்யிலே 7.10.1975 |