பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)181

37
மண் குதிரை

திரைப்பட மாவுன் வழிகாட்டி-* பேழ்வாய்த்
    திமிங்கல மாவுன் படகோட்டி?
நரிக்குண மாஇத் திருநாட்டில்? விட்டால்
    நடைப்பிண மாக்கும் குழிகாட்டி

உருப்படி மாற்ற வழிகாட்டும்-வேண்டா
    ஒப்பனை செய்ய வழிகாட்டும்
உருப்பட வாநல் வழிகாட்டும்?-பண்பை
    ஒழித்திட வன்றோ வழிகாட்டும்!

நிலைத்திடு மா *மண் பரியாற்றில்?-நீந்த
    நினைத்தனை யாயின் தடுமாற்றம்
உலர்த்திய மீனைப் புனலாற்றில்-விட்டால்
    உயிர்த்தெழு மென்றா அதையே ற்றாய்?

கவர்ச்சியில் ஒங்குங் கலைகாட்டி-உன்னைக்
    கவிழ்த்திடப் பார்க்கும் வலைநீட்டி
தவிர்த்திடு தோழா! மனையாட்டி-போலத்
    தலைப்படு வாளா விலையாட்டி?

8.10.19175


* பேழ்வாய் - பெரிய வாய்
‡ மண்பரி- மண்குதிரை