பக்கம் எண் :

182கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

38
காதற் காவியம்

இலக்கியம் ஒன்று படைப்போம்-காதல்
இலக்கணம் முழுமையும் அதனுள் அமைப்போம்

- இலக்கியம்...

மலர்த்தொடை அணிந்திடும் மாதே வருவாய்
மனத்தெழும் உணர்ச்சியை இதழ்வழி தருவாய்

- இலக்கியம்...

ஒவ்வொரு பக்கம் ஒவ்வொரு கதையாம்
ஒன்றினில் ஒன்று விஞ்சிய சுவையாம்
எவ்வகைத் தடையும் இடுபவர் இலையாம்
எடுத்ததை இரவெலாம் படித்திடும் கலையாம்

- இலக்கியம்...

படித்திடப் படித்திடப் புதியன கிடைக்கும்
பலமுறை முடிப்பினும் விழைவினைக் கொடுக்கும்
படித்தபின் நினைப்பினில் இனிமையைப் படைக்கும்
பயனாய் இலக்கியப் பரிசிலும் கிடைக்கும்

- இலக்கியம்...

10.9.1976