| பாடுங்குயில் (பாடல்கள்) | 183 |
39 கவிதை உலகு என்னை மறந்தேன் உன்னுள் கலந்தேன் எழுந்தது புதுவித உணர்வு-பின்னே எத்தனை எத்தனை கனவு- கண்ணே இதுதான் கவிதை உலகு விண்ணில் மிதந்தேன் மண்ணை மறந்தேன் விரிந்தது கற்பனைச் சிறகு-வான வெள்ளிகள் தண்முகில் உறவு-தந்த விளைவே கவிதை உலகு நெஞ்சம் நெகிழ்ந்தேன் அன்பில் நனைந்தேன் நிறைந்தது வளர்ந்தது கனவு-இன்பம் நிகழ்த்திய நாடக நினைவு-தந்த நிழலே கவிதை உலகு சூழல் துறந்தேன் யாவும் மறந்தேன் சுழன்றது பறந்தது கவலை- அடடா சுரந்தது நெஞ்சினில் உவகை-அந்தச் சுவடே கவிதை உலகு 20.9.1976 |