பக்கம் எண் :

184கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

40
இதுதான் அவர் வேலை

இதுதானடி அவர்வேலை-என்னை
ஏறிட்டும் பார்ப்பதில்லை அந்தக் காளை

- இதுதான்

பொதுவான உலகொன்று வேண்டுமாம் அங்குப்
பொருள்யாவும் சமமாக வேண்டுமாம் தோழி

- இதுதான்

அரங்கேறிப் பேசுங்கால் அயராத அருவி
அவர்பேச்சில் மயங்காத பேரில்லை உருகி
உறங்காத விழியோடு புரள்வேனை மருவி
ஒருபேச்சுப் பேசத்தான் பொழுதில்லை அறிநீ

- இதுதான்

வாழ்வுக்கு வழிகாட்டுங் கவிமாலை தொடுப்பார்
வறியோர் தம் துயரங்கள் கண்டுள்ளந் துடிப்பார்
தாழ்வுக்குப் பலியானோர் கண்ணீரைத் துடைப்பார்
தமியாளின் விழிநீரைக் காணாமல் நடப்பார்

- இதுதான்

20.9.1976