186 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கூடத்தே கோலம் வைத்தேன் எழிற் கோலத்தை மேலில் வைத்தேன் கூடத்தான் ஆசைவைத்தேன்-*பள்ளிக் கூடத்தான் வரவே இல்லை
- ஓடத்தான் தேடத்தான் யாரே செல்வார்!-துயர் தேயத்தான் யாரே சொல்வார்? பாடத்தான் நெஞ்சே சொல்லும்-காதல் பாடத்தான் வரவே இல்லை
- ஓடத்தான் ஆடத்தான் வைத்தான் என்னை-புனல் ஆடத்தான் வைத்தான் கண்ணை வேடத்தான் பொய்த்தான் சொல்லை-காதல் வேகத்தான் வரவே இல்லை
- ஓடத்தான் 26.9.1976
* பள்ளிக்கூடத்தான் -பள்ளியறைக்குரியவன் |