188 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
வீசிய கல்நுனி கூட்டினில் பட்டுக் கீழே வீழ்ந்திடும் தேன்துளி பிள்ளையர் தொட்டுப் பூசினர் நாவினில் கூசுதல் விட்டுப்-பின்னும் பூமியில் தூற்றினர் நாநயம் கெட்டு கோடுயர் தென்மலை தாழ்வதும் இல்லை- தேனின் கூடுள சாரலும் வீழ்வதும் இல்லை காடுகள் மேடுகள் பூத்துள முல்லை-மொய்த்துக் கட்டிடும் *தேனினம் கூட்டினை †ஒல்லை தேனினம் சஞ்சலம் விட்டன கூடி- மீண்டும் தேடிடும் பாடிடும் பூவினை நாடி வானுயர் மாமலைக் காவினில் பாடிச்-சென்று வந்திடும் வென்றிடும் வாகைகள் சூடி 28.8.1976
* தேனினம் - தேனீக்கள். † ஒல்லை - விரைவாக |