பக்கம் எண் :

பாடுங்குயில் (பாடல்கள்)189

43
அவன் தான் இறைவன்

தனக்கென வாழ்பவன் ஒருவன்-அவன்
தாங்கிய வடிவம் மானிட உருவம்

- தனக்கென

தனக்கும் பிறர்க்கும் வாழ்பவன் மனிதன்-அவன்
தந்ததோர் பிறவியைப் போற்றிடும் இனியன்

- தனக்கென

தனக்கென முயலான் பிறர்க்கென முயல்வான்
தன்னையும் பொன்னையும் அவர்க்கெனத்தருவான்
மனத்துயர் சூழும் பொழுதினும் அயரான்
மதியான் தன்னலம் அவன்தான் இறைவன்

- தனக்கென

நிலத்தினில் தோன்றும் எப்பொரு ளாயினும்
நிறைபயன் பிறர்பெறப் பயன்பட லாயின
புலப்படும் அறிவோ ஆறுள வாயினும்
புரிந்திலன் பொதுநலம் அவனா மானிடன்?

- தனக்கென

29.9.1976