190 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
44 உலக நாடகம் உலகம் ஒரு நாடகம் - அதில் ஒவ்வொரு மனிதனும் போடுவான் வேடம் - உலகம் நிலவிய அரங்கம் இல்லாமல் நடிப்பான் நினைப்பதை முடித்திடச் சுரங்களும் பிடிப்பான் - உலகம் இரவினில் போடும் எழில்மிகு வேடம் எதுதான் காணும் பகல்வரும் போது? பொருள்வரும் வேளை உறவுகள் கூடும் போனபின் எங்கோ புகுந்திட ஓடும் - உலகம் தாளமும் உண்டு மேளமும் உண்டு தாந்திமி தோமென ஆடலும் உண்டு வேளைகள் கண்டு பாடலும் உண்டு விடிந்ததும் ஓடும் கிடைத்தது கொண்டு - உலகம் 'b6சொல்லதில் வேந்தன் நடித்திடும் போது சொன்னதைத் தாண்டும் திரைவிழும் போது நல்லவன் மாந்தன் கதிர்வரும் போது நாயினும் கீழாம் அதுவிழும் போது - உலகம் அரங்கினில் நின்றால் அவனொரு பாரி அதன்பின் என்றால் படு *முல்லை மாறி இரங்கிடச் செய்வான் இனியவை கூறி ஏய்த்தபின் செல்வான் பிறர்நலம் வாரி - உலகம் 29.9.1976
'b6 சொல்வதில் வேந்தன் -அரிச்சந்திரன் * முல்லை மாறி - இயல்பு கெட்டவன் |