192 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
உரைநடை எல்லாம் பாடல்க ளென்றால் உயரிய கவிதை நிலைஎன் னாகும்? வரைபட மெல்லாம் ஓவிய மென்றே வாழ்த்தொலி கூறின் வாழ்கலை சாகும்! கருச்சிதை வெல்லாம் பிள்ளைகளென்றால் கண்டவர் ஏளனம் செய்திடு வாரே தெருப்படி யாகித் தேய்ந்திடுங் கவலைத் தெய்வமென் றாலதை நம்புவர் யாரே! போலிக ளெல்லாம் உண்மைகள் என்றால் பூமியில் நன்மைகள் வாழ்வதும் ஏது? வேலிக ளெல்லாம் பைம்பயிர் ஆனால் விளைநில மென்றொரு சொல்கிடையாது. நல்லது கெட்டது கண்டறி யாது நடந்திடும் செம்மறி யாடுகள் போலே செல்கிற மாந்தர் சேரிடம் எங்கோ? சிந்தைகள் யாவும் குழம்பினர் அந்தோ! 30.9.1976 |