பக்கம் எண் :

194கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2

47
நல்ல நேரம்

இதுதான் நல்ல நேரம் - சோம்பி
இருந்திடின் தம்பி துயர்வந்து சேரும்

- இதுதான்

எதுதான் இருப்பினும் இடர்தான் தடுப்பினும்
புதுநாள் படைத்திடப் புலியே புறப்படு

- இதுதான்

இளமையை வீணே செலவிடல் நன்றோ?
இதுபோல் பருவம் இனிமேல் என்றோ?
வளமையைக் கல்வி வழங்கிடும் நன்றே
வளர்ந்தால் நின்னை வாழ்த்திடு மன்றே

- இதுதான்

வைகறை ஒன்றே கற்றிடத் தோது
வாய்ப்பிதை விட்டால் வந்திடும் தீது
வைகலும் சென்றே பள்ளியில் ஓது
வாய்மொழி கேட்டால் வெற்றிதப் பாது

- இதுதான்

30.9.1976