| பாடுங்குயில் (பாடல்கள்) | 195 |
48 என் காதலி அவள்தான் எனக்குக் காதலி-என ஆவியில் மெய்யில் நடமிடும் மாதன்
- அவள் எழுத்தென்னும் மலரெடுப்பாள் எழிலாகத் தொடைமுடிப்பாள் கழுத்தில்அசை படநடப்பாள் காலடியில் சீர்படைப்பாள்
- அவள் தலைமயங்கச் சுவைகொடுப்பாள் தளையுண்டு தவங்கிடப்பாள் கலைவிளங்க எனை அணைப்பாள் கனவுலகை வரவழைப்பாள்
- அவள் *பாவாடை அணிந்திருப்பாள் பயிர்போல விளைந்திருப்பாள் நாவாரக் கனிந்திருப்பாள் நான்பாட மகிழ்ந்திருப்பாள்
- அவள் 15.10.1976
* பாவாடை - பா ஆடை. பாவுக்குரிய எழுத்து, அசை முதலிய உறுப்புகள் இப்பாடலில் சுட்டப்பட்டுள்ளன. |