198 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
51 தமிழ் பாடத் தடையா? தமிழே உன் புகழ்பாட வாழ்வெடுத்தேன்-ஆசை தணியாமல் இசைகூட்ட யாழெடுத்தேன்
- தமிழே இமைமூடும் விழியாலே எதுகாண முடியும்? எழில்யாழை உறைமூடின் எதுபாட இயலும்?
- தமிழே நரம்பேழும் நலமாக முறுக்கேற வைத்தேன் - நீ நரம்போடு விளையாடும் விரல்சோர வைத்தாய் திறம்பாடி உயிர்வாழுங் குறியோடு நின்றேன்-நீ திரும்பாமல் முகங்கோடிச் சிலையாக நின்றாய்
- தமிழே சுமையாகத் துயர்வந்தே எனைமோதல் முறையா? சுரம்பாடும் நரம்பொன்று பகையாதல் சரியா? எமையாளுந் தமிழேஉன் புகழ்பாடத் தடையா? இரங்காமல் இருக்கின்றாய் இதுதான்உன் விடையா? - தமிழே 20.11.1976 |