| பாடுங்குயில் (பாடல்கள்) | 199 |
52 மனம்போல் விளையாடு வந்ததை எழுது கண்டதை உளறு வளரும் புதுமையில் அதுதான் பாடலடா சந்தையில் இலக்கணம் சரிவரத் தெரிந்தவர் தவறியும் இல்லை அதனால் ஏடெடுநீ ரிருப்பினும் தென்புடன் எழுந்தே செப்பிட மாட்டார் அதனால் பாடிடுநீ புகழ்வாய் ஒருநாள் இகழ்வாய் மறுநாள் புண்படப் பாடுக அதுதான் பொருள்தருமாம் இகழினும் புகழினும் இருகை ஒலியால் ஏற்பவர் மிகப்பலர் அதனால் புகழ்பெறுவாய் பண்புகள் உணர்ந்தவர் பார்தனில் அருகினர் வேண்டாம் அதனால் கவிதருவாய் முதல்நாள் ஒன்றும் மறுநாள் ஒன்றும் முரண்படப் பேசுக அதுதான் அரசியலாம் இதுதான் முறையா எனவுனைக் கேட்டால் இதுவே அரசியல் என்றே உரைசெயலாம் ஏனெனில் அரசியல் தெரிந்தவர் இல்லை துணியார் எனவே பறையறைவாய் |