200 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
கயமைகள் செய்வாய் செய்தவை எல்லாம் கரவா துரைப்பாய் அதுதான் நலந்தருமே நயமுடன் உண்மை நவின்றனை என்றே நாடுனைப் போற்றும் அதனால் விளம்பரமே சொல்லையும் செயலையும் ஒப்பிடத் தெரிந்தவர் மாட்டார் அதனால் முழங்கிடுவாய் களிமயக் குறுவாய்க் கன்னியர் நுகர்வாய் கடவுளின் பேரைக் கலந்தால் போதுமடா எளியவர் மாந்தர் எதனையும் ஓரார் எதுநீ சொலினும் அதுதான் வேதமடா மடமையில் மூழ்கி மதியை மறந்தவர் னாலுனை உலகே சூழுமடா 20.11.1976 |