202 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 2 |
54 அறிஞர் வாழ்க! அறிஞர் வாழ்கவே-பேர் அறிஞர் வாழ்கவே-இசைப்பேர் அறிஞர் வாழ்கவே
- அறிஞர் நிறையும் ஞானம் பொழியுங் கானம் சொரியும் மேகம் தவழும் வானம்
- அறிஞர் திருவாய் மலர்ந்தால் ஏழிசை மணக்கும் தேன்மழை போலது காதினில் இனிக்கும் ஒருகால் கேட்பினும் நெஞ்சினை உருக்கும் ஓ!ஓ! அவர்புகழ் என்றுமே இருக்கும்
- அறிஞர் இசையின் மயமாய் மேடையில் இருப்பார் இசைத்திடும் பாடலில் இரண்டறக் கலப்பார் அசையும் உடலால் இசை நயம் கொடுப்பார் அவரே மதுரைச் சோமுவென் றுரைப்பார்
25.11.1976 - அறிஞர் |